Home அரசியல் புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்

புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்

466
0
SHARE
Ad

ANWARபெட்டாலிங் ஜெயா, மே 6 – தனது அரசியல் போராட்டத்தில் இன்னும் மனம் தளராத எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் மே 8ஆம் தேதி புதன்கிழமை  மக்களுடனான ஒரு மாபெரும் சந்திப்புக் கூட்டத்தை நடத்துகின்றார்.

#TamilSchoolmychoice

பெட்டாலிங் ஜெயா கிளானா ஜெயா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அன்வார் உரையாற்றுவார் என்பதோடு, மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையமும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நிகழ்த்திய தேர்தல் முறைகேடுகள் குறித்து அன்வார் விளக்குவார்.

“மக்களின் மகத்தான ஆதரவு எங்களுக்கே”

“அதிக பட்ச மக்களின் ஆதரவு வாக்குகள் எங்களின் மக்கள் கூட்டணிக்கே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்த வாக்காளர்களின் 50.3 சதவீத வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வேளையில், 46.8 சதவீத ஆதரவு வாக்குகளே தேசிய முன்னணிக்கு கிடைத்திருக்கின்றது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்திருப்பது இந்த தேர்தலில் உண்மையிலேயே வென்றது நாங்கள்தான் என்பதையும் நிரூபித்திருக்கின்றது. அதோடு தேர்தல் ஆணையமும், நஜிப்பும் நிகழ்த்திய தேர்தல் முறைகேடுகளை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது” என இன்று வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் அன்வார் தெரிவித்தார்.

மலேசியர்கள் அனைவரும் திரளாக இந்த கூட்டத்திற்கு வந்து சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக தங்களின் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும், தங்களின் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டுமெனவும்  அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

இந்த தேர்தல் முறைகேடுகள் குறித்த தனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்கள் கிடைக்காத வரையில் தனது அரசியல் போராட்டம் ஓயாது என்றும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எங்களின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்றும் அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.