Home அரசியல் ம.சீ.ச இனி அமைச்சரவைவில் இடம் பெறாது;தலைவர் பதவியும் வேண்டாம் – சுவா சொய் லெக் அதிருப்தி

ம.சீ.ச இனி அமைச்சரவைவில் இடம் பெறாது;தலைவர் பதவியும் வேண்டாம் – சுவா சொய் லெக் அதிருப்தி

445
0
SHARE
Ad

Chua Soi Lekபெட்டாலிங் ஜெயா, மே 7 –  விரைவில் தொடங்கவிருக்கும் உட்கட்சித் தேர்தலில், மசீச கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதில்லை என அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் இம்முறை குறைவான தொகுதிகளையே தேசிய முன்னணி வென்றுள்ளது. அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான ம.சீ.சவும் போட்டியிட்ட 37 நாடாளுமன்ற தொகுதிகளில் 7 ல் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதனால் மிகவும் மனம் உடைந்து போன ம.சீ.ச தலைவர் சுவா சொய் லெக், இனி அமைச்சர் பதவி, துணையமைச்சர், ஆட்சிக்குழு உறுப்பினர் இப்படி எந்த ஒரு பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

அதே போல், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 13 ஆவது பொதுத்தேர்தலில் ம.சீ.ச கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தால் அமைச்சரவையில் இடம் பெறப்போவதில்லை என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ம.சீ.ச வைச் சேர்ந்த எந்த ஒரு தலைவரும் அரசாங்கப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியாக சொய் லெக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சீன சமுதாயம் கைவிட்டது

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இம்முறை ம.சீ.ச கட்சிக்கு சீனர்களின் ஆதரவு பெருமளவு குறைந்துள்ளதை ஏற்றுக்கொண்ட சுவா சொய் லெக், சீன சமுதாயத்தின் மீது தான் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மலாய்காரர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று அம்னோ மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது ஆனால் ம.சீ.ச வால் அவ்வாறு செய்ய முடியாமல் சீனர்களின் வாக்குகளைத் தவறவிட்டுள்ளது “அது தான் ஜனநாயகம்” என்றும் சொய் லெக் கூறியுள்ளார்.

இருப்பினும், சீன சமுதாயம் ம.சீ.ச வின் மீதிருந்த நம்பிக்கையை இழந்து ஜ.செ.க  வுக்கு ஒரு மனதாக வாக்களித்திருக்கிறது. அவர்களின் மனநிலையை தான் மதிப்பதாகவும், முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்திருக்கும் நஜிப் தலைமையிலான அரசு, இனி தொடர்ந்து சீனர் நலன்களில் அக்கறை எடுத்து அவர்களை அரவணைத்துச் செல்லும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.