சிரம்பான், மே 09 – நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக அம்மாநில தேசிய முன்னணி தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹஸ்ஸான் வரும் சனிக்கிழமை, பேரரசர் துங்கு முக்ரீஸ் முன்னிலையில் இஸ்தானா பெசார்ஸ்ரீ மெனான்டியில் பதவி ஏற்கவுள்ளார்.
3 வது முறையாக மந்திரி பெசார் பதவி ஏற்கவுள்ள ஹஸ்ஸான், பொதுத்தேர்தலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அய்ஷா பிந்தி லம்சாவை விட 4,613 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.