Home அரசியல் பினாங்கு மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் நியமனம்

587
0
SHARE
Ad

Jagdeep Singh Deoஜோர்ஜ் டவுன், மே 9 – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக இரண்டு இந்தியர்கள் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் ஜ.செ.க தலைவர்களுள் ஒருவரான கர்ப்பால் சிங் மகன் ஜக்தீப் சிங் டியோ( படம் இடது) மற்றும் டாக்டர் பி.ராமசாமியும் (படம் வலது) ஆவர்.

பினாங்கு மாநில நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மற்றும் வீடுகள் குழு முன்னாள் தலைவரான வோங் ஹான் வேய்க்கு பதிலாக ஜக்தீப் சிங் டியோ நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநில முதல் துணை முதல்வராக பிகேஆரில் புதிதாக இணைந்துள்ள முகமட் ராஷித் ஹஸ்னானும், இரண்டாவது துணை முதல்வராக  டாக்டர் ராமசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். penang-p.ramasamy

இது தவிர பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரான சோங் எங் இளைஞர் மற்றும் விளையாட்டு, பெண்கள், குடும்ப மற்றும் சமூக வளர்ச்சி மற்றும் கலை குழுத் தலைவராகவும், செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் அபீப் பகார்டின் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.