Home நாடு சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் வெற்றி! மலாய்க்காரர் அல்லாதவர்கள் வாக்களிக்க அதிக அளவில் வரவில்லை!

சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் வெற்றி! மலாய்க்காரர் அல்லாதவர்கள் வாக்களிக்க அதிக அளவில் வரவில்லை!

203
0
SHARE
Ad
சுங்கை பாக்காப் பாஸ் வேட்பாளர் அபாங் அபிடின் இஸ்மாயில் (இடது) – பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் (வலது)-கோப்புப் படம்

சுங்கை பாக்காப் : இன்று நடைபெற்ற பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபாங் அபிடின் வெற்றி பெற்றார்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3,700 வாக்குகள் பெரும்பான்மையில் பெரிக்காத்தான் முன்னிலை வகிக்கிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில்தான் இந்தத் தொகுதியில் வேட்பாளர் வெற்றிபெறுவார் எனக் கணிக்கப்பட்ட நிலையில் கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலை விட கூடுதலான வாக்குகள் பெரும்பான்மையை பாஸ்-பெரிக்காத்தான் வேட்பாளர் அபாங் அபிடின் பெற்றுள்ளது பக்காத்தான் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி மலாய் வாக்காளர் 70 விழுக்காடு அளவில் வாக்களிக்க வந்ததாகவும், சீன சமூகத்தினர் 47% என்ற அளவிலும், இந்திய வாக்காளர்கள் 58% என்ற அளவிலும் வாக்களிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வித்தியாசம் காரணமாகவே, பக்காத்தான் சுங்கை பாக்காப் தேர்தலில் தோல்வியைத் தழுவியதாகவும் ரபிசி ரம்லி தெரிவித்தார்.

மலாய்க்காரர் ஆதரவு சிறிய அளவில் பக்காத்தானுக்கு ஆதரவாக இருந்தாலும் அதிக அளவில் மலாய் சமூகத்தினர் வாக்குச் சாவடிகளுக்கு வந்ததே பெரிக்காத்தான் வெற்றிக்குக் காரணம் எனவும் ரபிசி தெரிவித்தார்.