Home கலை உலகம் காதல் வதந்தியில் சிக்கித் தவிக்கும் ஜனனி அய்யர்

காதல் வதந்தியில் சிக்கித் தவிக்கும் ஜனனி அய்யர்

995
0
SHARE
Ad

jananiமே 9- சாதாரணமாக பேசிப் பழகியதற்கு இப்படியொரு தண்டனையா என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஜனனி அய்யர்.

பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஜனனி அய்யர், அதையடுத்து ஸ்ரீகாந்துடன் பாகன் படத்தில் நடித்தார்.

ஆனால் அதன்பிறகு கவர்ச்சிகரமான கதைகளாக அவரை தேடி சென்றன.

#TamilSchoolmychoice

அதனால் எந்த படத்தையும் ஏற்காமல் இருந்த ஜனனி, மலையாள சினிமாவில் நடிப்பதற்காக சில இயக்குனர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்துதான், பரதேசி நாயகன் அதர்வாவுடன் ஜனனி அய்யரை இணைத்து காதல் செய்திகள் பரவின.

இதனால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகிப்போனாராம் ஜனனி. இதனால் மலையாள படங்களுக்கு முயற்சி செய்வதிலும் வேகம் குறைந்துவிட்டதாம்.

அதர்வாவுடன் சாதாரணமாகத்தான் பேசிப்பழகினேன். அதற்குப்போய் காது கண்ணு, மூக்கு வைத்து காதல் கதை பரப்பி விட்டார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதனால் தன் வீட்டில் தொடர்ந்து நடிப்பதற்கே தடை விதித்து விடுவார்கள் போலிருக்கு என்றும் புலம்புகிறாராம்.