Home உலகம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்

483
0
SHARE
Ad

gilaniஇஸ்லாமாபாத், மே 9-  பாகிஸ்தானில் நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் தேர்தலுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள தீவிரவாதிகள், ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி (படம்) இன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் முல்தான் நகரில் அலி ஹைதர் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஹைதரை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அலி ஹைதரின் பாதுகாப்புச் செயலாளர் கொல்லப்பட்டார். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடந்ததும் தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த இடத்தில் பதட்டம் நிலவியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள், அலி ஹைதரை கடத்திச் சென்றனர். ஜனநாயக அரசு அமைவதை கடுமையாக எதிர்த்து வரும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அலி ஹைதரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக முல்தான் நகரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தீவிரவாத இயக்கங்கள், அலி ஹைதரை ஏற்கனவே எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.