Home இந்தியா கர்நாடக வெற்றியால் காங்கிரஸ் உற்சாகம்: மோடி பிரசாரம் எடுபடாததால் பாரதீய ஜனதா அதிர்ச்சி

கர்நாடக வெற்றியால் காங்கிரஸ் உற்சாகம்: மோடி பிரசாரம் எடுபடாததால் பாரதீய ஜனதா அதிர்ச்சி

563
0
SHARE
Ad

MODIபுதுடெல்லி, மே. 9- கர்நாடகத்தில் பெற்ற வெற்றியால் காங்கிரஸ் மேலிடம் உற்சாகம் அடைந்துள்ளது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கி நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறது. இதனால் வருகிற 2014 பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்ற யோசனையில் இருந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாரதீய ஜனதாவை சூறாவளி போல் சுருட்டி வீசி விட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியைப்பிடித்துள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்தை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதே சமயம் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. 2 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. 2 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாரதீய ஜனதா அங்கம் வகிக்கிறது.

2009 பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 6 தொகுதியையும், பாரதீய ஜனதா 19 தொகுதியையும் கைப்பற்றி இருந்தது. தற்போதைய சட்டசபை தேர்தல் வெற்றி அங்கு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும், கர்நாடகத்தில் கூடுதல் எம்.பி. சீட் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் நம்பிக்கை அடைந்துள்ளது.

ஆந்திராவில் தெலுங்கானா மற்றும் ஜெகன்மோகன் இழப்பை கர்நாடகம் சரிக்கட்டிவிடும் என்றும் நம்புகிறது. இதனால்தான் நேற்று கர்நாடக தேர்தல் முடிவு வந்த போது டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமும், சோனியா வீடு முன்பும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே சமயம் பாரதீய ஜனதா அலுவலகம் வெறிச் சோடி காணப்பட்டது. கர்நாடகத்தில் நரேந்திரமோடி பிரசாரம் தங்களுக்கு கை கொடுக்கும் என்று பாரதீய ஜனதா கணக்கு போட்டு இருந்தது. ஆனால் தென் மாநிலத்தில் அவரது பிரசாரம் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது.

இதே போல் ராகுல்காந்தி பிரசாரம் செய்த உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது கர்நாடகத்தில் அவரது பிரசாரம் கை கொடுத்து இருப்பதால் ராசி செண்டிமெண்ட்டை தகர்த்து விட்டதாக காங்கிரசார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.