Home கலை உலகம் பிக்பாஸ் 2 : ரித்விகா வெற்றி பெற்றார்

பிக்பாஸ் 2 : ரித்விகா வெற்றி பெற்றார்

2678
0
SHARE
Ad
ரித்விகா

சென்னை – தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் இறுதி நிகழ்ச்சி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 முதல் ஒளியேறியது.

இந்த நிகழ்ச்சியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு 50 இலட்சம் ரூபாய் பரிசுப் பணத்தையும், வெற்றிக் கேடயத்தையும் பரிசாகப் பெற்றார்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான நால்வர் ஐஸ்வரியா டட்டா, விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி, ஆகியோர் ஆவர்.

#TamilSchoolmychoice

இவர்களில் ஜனனி சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் குழுவினர் ஜனனியையும் மற்றவர்களையும் கண்ணைக் கட்டவைத்து பிக் பாஸ் வீட்டிற்குள்ஆட விட்டனர். அவர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போதே ஜனனி வலுக்கட்டாயமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒரு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டார்.

அதன் பின்னர் மூன்றே வேட்பாளர்கள்தான் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் கடந்த ஆண்டின் வெற்றியாளர் ஆரவ், பிக் பாஸ் வீட்டின் உள்ளே வந்து அனைவருடனும் அளவளாவி விட்டு, பின்னர் விஜயலெட்சுமியை மட்டும் அழைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

ஐஸ்வர்யா டட்டா

எனவே, ஆகக் கடைசியாக எஞ்சியிருந்த இரண்டு பேர் ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகிய இருவர் மட்டுமே.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு கமல்ஹாசன் நினைவுப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். கடந்த ஆண்டு பிக்பாஸ் -1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, அந்த சமயத்தில் தனது பழக்க வழக்கங்களால் ஏராளமான இரசிகர்களைக் கவர்ந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், பிக்பாஸ் 2 பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் கமல்ஹாசன் தனியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ரித்விகா, ஐஸ்வர்யா இருவரையும் அழைத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி மேடைக்கு வந்தார்.

கமல் வெளியேறிய பின்னர் பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அந்த வீடும் இருளில் மூழ்கியது.

இருவரையும் மேடைக்கு அழைத்து வந்த கமல் இறுதியாக ரித்விகா வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார் என ரித்விகாவின் கையை உயர்த்தி அறிவித்தார்.