
இலண்டன் – நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருந்த பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஐநா பொதுப் பேரவையிலும் உரையாற்றினார்.
வெள்ளிக்கிழமை இரவு ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு மகாதீர் இலண்டன் வந்தடைந்தார்.
பிரிட்டனுக்கான தனது இரண்டாம் கட்ட வருகையை மகாதீர் தொடர்வார். இலண்டனிலும் சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.