Home Photo News சீக்கிய ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அன்வார்

சீக்கிய ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அன்வார்

1028
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்காக முதல் நாள் வெள்ளிக்கிழமையே போர்ட்டிக்சன் வந்தடைந்த அங்கு பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் வேட்புமனுத் தாக்கலில் அவர் கலந்து கொண்டபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு ஆதரவு வழங்கினர். அந்தப் புகைப்படக் காட்சிகளை இங்கே காணலாம்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும், உடனடியாகத் தனது பிரச்சாரத்தைத் தொடக்கினார் அன்வார்.

#TamilSchoolmychoice

போர்ட்டிக்சனிலுள்ள குருத்துவரா சாகிப் சீக்கிய ஆலயத்தில் சீக்கிய சமூகத்தினருடனான சந்திப்புக் கூட்டத்துடன் தனது பிரச்சாரத்தை அன்வார் முடுக்கி விட்டார்.

நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையே அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என விரும்புவதாகக் கூறிய அன்வார், “நான் எல்லா மதங்களையும் அவற்றின் போதனைகளையும் மதிக்கிறேன். நான் இங்கு வந்திருப்பதால் சில தீவிர முஸ்லீம் வாக்காளர்களின் வாக்குகளில் சிலவற்றைக் கூட நான் இழக்கக் கூடும். ஆனால், அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்ற மதங்களை மதித்து மரியாதை கொடுப்பதும், அவற்றின் கலாச்சாரங்களை புரிந்து கொள்வதும் முக்கியம் என எனது இஸ்லாம் மதத்தில் எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றும் அன்வார் கூறினார்.

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 28, பக்காத்தான் தேர்தல் நடவடிக்கை அறை திறப்பு விழாவில்…சனிக்கிழமை, செப்டம்பர் 29, வேட்புமனுத் தாக்கலின்போது…