Home இந்தியா நடிகர் கருணாஸ் விடுதலை

நடிகர் கருணாஸ் விடுதலை

1105
0
SHARE
Ad

சென்னை – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் காவல் துறையின் துணை ஆணையம் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிணை கோரி கருணாஸ் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்த 30 நாட்களுக்கு தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவரை விடுதலை செய்தார்.

மற்றொரு வழக்கிலும் கருணாசின் பிணை மனுவை விசாரித்த நீதிபதிஅந்த வழக்கிற்காக கருணாஸ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அடுத்த 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

#TamilSchoolmychoice

இந்த நிபந்தனைகளுடன் நேற்று கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.