Home இந்தியா வேலூர் சிறையில் நடிகர் கருணாஸ்

வேலூர் சிறையில் நடிகர் கருணாஸ்

1254
0
SHARE
Ad

சென்னை – சில நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்வரையும் காவல் துறையினரையும் சர்ச்சைக்குரிய வகையிலும், தரக்குறைவாகவும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரது சாலி கிராமம் வீட்டில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட அவரை எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொலைமுயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவர் மீதும் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கருணாஸ் கைது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் இதேபோல பேசிய நடிகர் எஸ்வி.சேகர் மற்றும் பாஜகவின் ஹெச்.இராஜா ஆகியோரைக் கைது செய்யாமல் கருணாசை மட்டும் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.