Home அரசியல் தேசிய முன்னணியின் அழைப்பை ஏற்கப் போவதில்லை – ஜசெக திட்டவட்ட அறிவிப்பு

தேசிய முன்னணியின் அழைப்பை ஏற்கப் போவதில்லை – ஜசெக திட்டவட்ட அறிவிப்பு

579
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2பினாங்கு, மே 10 – பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று மசீச கட்சி கூறியிருப்பதால், அதற்கு பதிலாக சீனர்களின் பிரதிநிதியாக ஜசெக தேசிய முன்னணியுடன் சேர வேண்டும் என்று சில தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால் அதை மறுத்த ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவர்களின் கோரிக்கையை தான் பரிசீலனை கூட செய்து பார்க்கப்போவதில்லை என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகனும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

#TamilSchoolmychoice

“பக்காத்தானின் ஒற்றுமையை சீர்குலைக்க தேசிய முன்னணி இது போன்ற தந்திரங்களைக் கையாள்கிறது. ஆனால் பதவிக்காக தேசிய முன்னணியுடன் சேரும் எண்ணம் ஜசெக வுக்கு கிடையாது. அப்படி சேருவதாக இருந்தால் 40 ஆண்டுகளில் எப்போதோ சேர்ந்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய முன்னணி, ஒத்துழைப்பை விரும்பினால் பக்காத்தானுடன் பேச வேண்டும் அதை விடுத்து கூட்டணிக் கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசுவது தவறு என்றும் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.