புத்ரா ஜெயா, மே10 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி விலக வேண்டும் என்று கூறி எஸ்.எம்.எம் என்ற இளைஞர் அமைப்பு இன்று புத்ரா ஜெயாவிலுள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சோலிடரிட்டி மஹாசிஸ்வா மலேசியா( Solidariti Mahasiswa Malaysia ) என்ற அந்த இளைஞர் அமைப்பின் தலைவரான சாப்வான் அனாங்குடன் சேர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆட்சேப கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் “EC” என எழுதப்பட்டிருந்த இரண்டு கறுப்பு நிறச் சவப்பெட்டிகளை வைத்திருந்ததோடு, ‘13 ஆவது பொதுத்தேர்தல் கறைபடிந்தது’ என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் வைத்திருந்தனர்.
தேர்தல் ஆணைய அதிகாரியிடம் அவர்களது கோரிக்கையை சமர்பித்த பின்னர், “ஏழு நாட்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.