பெட்டாலிங் ஜெயா, மே 10 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ம.சீ.ச கட்சி மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தற்குப் பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என மசீச கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மசீச கட்சியின் முன்னாள் தலைவர்களான டான்ஸ்ரீ லீ சான் சூன், டான் கூன் சுவான் மற்றும் முன்னாள் துணைத்தலைவர்களான டான்ஸ்ரீ லீ கிம் சாய் மற்றும் டான்ஸ்ரீ லிம் ஆ லேக் ஆகியோர் அடங்கிய குழு, இன்று பிற்பகல் 3 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர்களைச் சந்தித்து “ சொய் லெக் உடனடியாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்தலுக்குப் பிறகு , சுவா சொய் லெக் பதவி விலக வேண்டுமென்று அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கூறிவருவதால், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.