Home இந்தியா கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு கருணாநிதி வாழ்த்து

கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு கருணாநிதி வாழ்த்து

544
0
SHARE
Ad

karunanithiசென்னை, மே 11- கர்நாடக மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கருணாநிதி கூறியுள்ளதாவது:-

கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள நீங்கள், உங்கள் நீண்டகால அனுபவத்தைக் கொண்டு மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்த்துவைத்து ஏழைகள் மற்றும் பின்தங்கியுள்ள மக்களை பாதுகாப்பீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு.

#TamilSchoolmychoice

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வும் உங்கள் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் எனவும் நான் திடமாக நம்புகிறேன். உங்கள் பதவிக்காலம் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார்.