Home இந்தியா ஊடுருவல் விவகாரம் இந்தியா, சீனா இடையே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

ஊடுருவல் விவகாரம் இந்தியா, சீனா இடையே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

609
0
SHARE
Ad

salman-kurshidபெய்ஜிங், மே 11- இந்தியாவில் சீன ராணுவம் ஊடுருவிய விவகாரம் குறித்து இரு நாடுகளும் பரிசீலிக்கும் என்று சீனா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். சீன பிரதமர் லீ கிகியாங் இம்மாதம் 19ம் தேதி இந்தியா வருகிறார்.

அவரது பயணத்தின்போது விவாதிக்க வேண்டிய விவரங்கள், செய்ய வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து சீன தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று முன்தினம் சீனா சென்றார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை குர்ஷித் சந்தித்து பேசினார். சீன பிரதமரின் இந்திய பயணம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் ஊடுருவிய சீன ராணுவத்தினர் 20 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின், கடந்த ஞாயிற்றுகிழமை வாபஸ் பெற்றனர். எல்லை பிரச்னை குறித்தும் சீன தலைவர்களுடன் சல்மான் குர்ஷித் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், சீன அரசின் தொலைக்காட்சிக்கு குர்ஷித் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

சீன ராணுவத்தினர் சமீபத்தில் இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பிரச்னை சமீபத்தில் சுமூகமாக தீர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சில நாட்கள் நீடித்த முட்டுக்கட்டை குறித்து இரு நாடுகளும் பரிசீலிக்கும். இதுபோன்ற ஊடுருவல் பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்த்துக் கொள்ள ஏற்கனவே இருதரப்பும் ஏற்றுக் கொண்ட திட்டம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் விரைவில் தீர்க்கப்படும்.

இரு நாடுகளுக்கிடையே நல்ல நட்புறவு உள்ளது. சீனாவின் புதிய பிரதமர் லீ கிகியாங் முதல் முதலில் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருவது இருதரப்பு உறவு பலமுடன் இருப்பதையும் மேலும் மேம்படும் என்பதையும் உணர்த்துகிறது. இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உலக அளவிலும் குறிப்பாக ஆசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு குர்ஷித் கூறினார்.