குஜராத், மார்ச் 20 – குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்பு ஆண்மையற்றவர் என்று விமர்சித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தற்போது ஃபரூகாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையி்ல் 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு உண்டு.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மோடியை விசாரணைக்கே அழைக்கவில்லை. ஆனால் மோடி தனக்கும் இக்கலவரத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருவது, மழலையர் பள்ளியில் நற்சான்றிதழ் பெற்ற மாணவன்,
மருத்துவப் பட்டம் பெற்றதாக நினைத்துக் கொள்வதற்குச் சமமானதாகும் என்று தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். இவரது கருத்துக்கு பா.ஜ.கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.