Home இந்தியா ரஷ்ய விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும்- மன்மோகன் சிங்!

ரஷ்ய விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும்- மன்மோகன் சிங்!

527
0
SHARE
Ad

manmohan-singh-2009-3-4-6-12-56கிரிமியா, மார்ச் 20 – கிரிமியா இணைப்பு விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு குறித்து அதிருப்தியடைந்த மேற்கத்திய நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஜப்பான் மென் பொருளாதாரத்தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தியா, ரஷ்யா விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்படுகிறது என்றும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது என்றும் இந்திய அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிராந்திய நாடுகளுடன் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும்,

#TamilSchoolmychoice

பிரச்சனைக்கு சுமூகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கிரிமியா வாக்கெடுப்புக்கு இந்தியா ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.