மார்ச் 20 – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்த தொழிற்பிரிவின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் (European Union) சேர்ந்த 28 நாடுகளிலும் வரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கைப்பேசிகளின் மூலம் அனுப்பப்படும் தகவல்களுக்கும், அழைப்புகளுக்கும் அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இணையப் பயன்பாடுகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிகிறது.
எனினும், இந்த தீர்மானத்தைச் செயல்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும். வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி இந்த ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் முதல் இதற்கான குறைந்த கட்டண விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் கைப்பேசி மற்றும் இணையத்தின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.