Home நாடு கைரி கூறுவதில் உண்மை இல்லை – ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மறுப்பு

கைரி கூறுவதில் உண்மை இல்லை – ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மறுப்பு

777
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும் கொவிட் தடுப்பூசிகளை விட அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதால் மலேசியாவுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார்.

கைரி ஜமாலுடின் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமாவார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) மலேசியாவுக்கான தூதர் மிக்காலிஸ் ரோக்காஸ் இந்தக் கூற்றை மறுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மலேசியாவுக்குத் தேவைப்படும் எல்லா தடுப்பூசிகளையும் அனுப்புவதில் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குரிய ஒப்புதலையும் அனுமதியையும் வழங்கியிருந்தது” என்று அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

மலேசிய நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் செயல்பாட்டுக்காக 5 மில்லியன் அளவை (டோஸ்) கொண்ட தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது என்றும் மிக்காலிஸ் கூறினார்.

ஜூன் 15 வரையில் 4.87 மில்லியன் அளவைகள் கொண்ட பிபைசர் பையோஎன்டி தடுப்பூசிகளும் 560 ஆயிரம் அளவைகள் கொண்ட அஸ்ட்ரா ஜெனிகா அதிகாரிகளும் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.  இவை அனைத்தும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டு ஏற்றுமதிகள் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் விளக்கினார்.