Home இந்தியா மும்பை தாக்குதல் தீவிரவாத அமைப்புக்கு நிதி ஒதிக்கீடு: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை – குர்ஷித்...

மும்பை தாக்குதல் தீவிரவாத அமைப்புக்கு நிதி ஒதிக்கீடு: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை – குர்ஷித் தகவல்

618
0
SHARE
Ad

இஸ்லாமாபாத், ஜூன் 19- 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியது லஷ்கர் இ தொய்பா அமைப்பு. தடை செய்யப்பட்ட இதன் தாய் இயக்கம் ஜமாத் உத் தாவா.

salman-khurshid_350_030713051712இதன் தலைவன் ஹபிஸ் சயீத். இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான கட்சியின் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாகாண அரசு 2013-14ம் நிதியாண்டுக்கான வரவு செலவில் ரூ.6.1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் நேற்று நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் நாட்டின், மாநில அரசு மேற்கொள்ளும் முடிவுகள் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. நமது சமூகத்துடன் தொடர்புடைய விஷயங்கள் பற்றி நமக்கு தகவல் கிடைக்கும் போது, அது குறித்து பாகிஸ்தானின் மத்திய அரசிடம் பேசுவோம்.

நமக்கு தொடர்புடைய, கவலையளிக்கக் கூடிய விஷயங்களில் நாங்கள் கவன குறைவாக இருக்கமாட்டோம் என்பதை நீங்கள் நம்பலாம். பாகிஸ்தான் அரசிடமிருந்து சாதகமான தகவல்கள் வருகின்றன. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.

யாராவது ஒருவர் ஹபிஸ் சயீத்-க்கு உதவி செய்தால் அவர்கள் இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பது உறுதி. இந்த செயல் நடைபெற்றால், அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.