Home இந்தியா மோடியை விமர்சித்த குர்ஷித்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம்!

மோடியை விமர்சித்த குர்ஷித்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம்!

599
0
SHARE
Ad

Tamil_Daily_News_97663080693புதுடில்லி, பிப் 27 – பா.ஜ.க  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ஆண்மையில்லாதவர் என, தரக்குறைவாக விமர்சித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு பா.ஜ.க  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பருக்காபாத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யும், வெளியுறவுத்துறை அமைச்சருமான, சல்மான் குர்ஷித், மோடியை, ஆண்மையில்லாதவர் என, நேற்று முன்தினம், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறினார்.

அவரின் பேச்சுக்கு, பா.ஜ.க  தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் குர்ஷித்தின் இத்தகைய பேச்சு  மிகவும் கேவலமானது. தோல்வி பயத்தில், காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு நாகரிகமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார்.

காங்கிரஸ்  தலைவர் சோனியா இதுபோன்ற வார்த்தைகள் பேசுவதை அனுமதிப்பாரா? குர்ஷித் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்  என, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான  ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அது போல், காங்கிரஸ் தலைவர்கள் பொறுமை காக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

தேர்தல் வரும்  போகும். அதற்காக தரம் தாழ்ந்து பேசக்கூடாது. இவ்வாறு பேசுவதால் காங்கிரஸ்  செய்த ஊழல்கள், முறைகேடுகளை மக்கள் மறந்து விடமாட்டார்கள்  என, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தி தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

எனினும், குர்ஷித் தன் ஆவேச பேச்சுக்கு  வருத்தம் தெரிவிக்காமல், தான் பேசியது சரிதான் என்ற ரீதியில், குஜராத் கலவரத்திற்காக மோடியை நான் அவ்வாறு கூறவில்லை. கலவரத்தை அடக்கத் தவறிய அவரின் செயலற்ற தன்மையைத் தான் இவ்வாறு குறிப்பிட்டேன் என கூறினார் மத்திய அமைச்சர் குர்ஷித்.