Home நாடு “நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் தமிழ், சீனப் பள்ளிகளை அகற்றுங்கள்” – மலாய் கல்விமான் கருத்து

“நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் தமிழ், சீனப் பள்ளிகளை அகற்றுங்கள்” – மலாய் கல்விமான் கருத்து

801
0
SHARE
Ad

e_pg08rahmanகோலாலம்பூர், மே 13 – மலேசிய மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டுமானால், நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீன பள்ளிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைவருக்கும் பொதுவாக மலாய் மொழியை மட்டும் போதிக்கும் தேசிய பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைவேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கூறியுள்ளார். பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் இன ஒற்றுமையை வலுவூட்டுவதற்கு இந்த மாற்றம் மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இனவாதம் தலைதூக்கி காணப்பட்டது. சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மலேசிய மக்கள் வெவ்வேறு இனங்களாகவே பிரிந்து கிடக்கிறார்கள். இதற்கு தமிழ், சீனப் பள்ளிகள் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. இதனால் தொடக்கத்திலேயே அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது” என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஒரே மொழியை போதிக்கும் தேசிய பள்ளிகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்நாட்டின் ஒற்றுமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகத் தான் கருதுவதாகவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice