Home நாடு “முன்னாள் நீதிபதியின் பேச்சைக் கேட்டால் கூ கிளக்ஸ் காரர்களே வெட்கமடைவார்கள்” – அன்வார் இப்ராகிம்

“முன்னாள் நீதிபதியின் பேச்சைக் கேட்டால் கூ கிளக்ஸ் காரர்களே வெட்கமடைவார்கள்” – அன்வார் இப்ராகிம்

584
0
SHARE
Ad

imageகோலாலம்பூர், மே 13 – முன்னாள் நீதிபதி டத்தோ முகமட் நோர் அப்துல்லா மலாய் இனம் தொடர்பாக நேற்று வெளியிட்ட கருத்துக்கு, எதிர்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதோடு அவரது பேச்சை அடோல்ப் ஹிட்லர், கூ கிளக்ஸ் காரர்கள் போன்ற இன வெறி கொள்கை கொண்டவர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டுள்ளார். முகமட் நோர் அப்துல்லாவின் பேச்சை கூ கிளக்ஸ்காரர்கள் கேட்டிருந்தால் வெட்கித் தலைகுனிவார்கள் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

“நஜிப் தலைமையிலான அரசாங்கத்தின் இனவாதப் போக்குகளை இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் பொறுத்துக் கொண்டிருப்பது?” என்று அன்வார் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அம்னோ மக்களின் மனதில் வெறுப்பைத் தூண்டி, அவர்களை இனவாரியாக பிரித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக பக்காத்தான், மக்களின் மனதில் நல்ல எண்ணங்களையும், அனைவரும் சமம் என்ற கொள்கைகளையும் விதைத்து வருகிறது என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

யுஐடிம் மலேசியா பட்டதாரிகள் சங்கமும், தீவகற்ப மலாய் மாணவர் சங்க கூட்டமைப்பின் சார்பாக நேற்று நடந்த கருத்தரங்கில் பேசிய  முகம்மட் நோர் அப்துல்லா, “ நம்பிக்கை துரோகம் என்பது மலாய் இனத்தவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. தங்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவர்களை அவர்கள் பழிவாங்க நினைத்தால் அதற்கு முடிவே இல்லாமல் சென்றுவிடும்.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 13 ஆவது பொதுத்தேர்தலில் “நம்பிக்கை துரோகம்” இழைத்ததற்காக சீனர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.