Home கலை உலகம் சுவாசக் கோளாறினால் டிஎம் சௌந்தரராஜனுக்கு தீவிர சிகிச்சை

சுவாசக் கோளாறினால் டிஎம் சௌந்தரராஜனுக்கு தீவிர சிகிச்சை

615
0
SHARE
Ad

TMS-Sliderசென்னை, மே 13 – ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகர்டிஎம்எஸ் எனப்படும் டிஎம் சௌந்தரராஜன் சுவாசக் கோளாறால்பாதிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.பல ஆயிரம் பாடல்கள் பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள டிஎம்எஸ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவ்வப்போதுசிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற டி.எம்.எஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார்.

ஆனால் நேற்று திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சௌந்தரராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.டி.எம்.சௌந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உடனிருக்கின்றனர்.