Home கலை உலகம் டி.எம்.எஸ். நல்லுடல் தகனம்! திரையுலகம் திரண்டு கண்ணீர் அஞ்சலி!

டி.எம்.எஸ். நல்லுடல் தகனம்! திரையுலகம் திரண்டு கண்ணீர் அஞ்சலி!

810
0
SHARE
Ad

TMSசென்னை, மே 27சென்னையில் காலமான பின்னணி பாடகர்டி.எம்.சௌந்தர்ராஜனின்(91 வயது) நல்லுடல் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

திரையுலகினர் திரளாகத் திரண்டு வந்து சினிமாப் பின்னணிப் பாடல்களின் பிதாமகனாகக் கருதப்படும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் அஞ்சலி

சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டஅவரது உடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சிவக்குமார், விஜயகாந்த், டி.ராஜேந்திரன், பாக்யராஜ், வடிவேலு, ராஜேஷ், மனோ, பி.சுசீலா, எம்.எஸ்.பாஸ்கர், சங்கர் கணேஷ், வாணி ஜெயராம், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல திரையுலகினரும், அழகிரி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் அஞ்சலிசெலுத்தினர்.

திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர் சௌந்தரராஜனின் உடல்அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பின்னர்மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் வைத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.டி.எம்.எஸ். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

அவரது மறைவை முன்னிட்டு பல முக்கிய தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

தமிழகமக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்., என, முதல்வர்ஜெயலலிதா, டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

ராதே என்னை விட்டு போகதடி என்றபாடலின் மூலம், தமிழ் திரையுலகில், அடியெடுத்து வைத்தடி.எம்.சவுந்திரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளசவுந்திரராஜன், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் சில பாடல்களைபாடியுள்ளார்.

முருக பெருமான் மீதான, “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”,  “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா” போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தார்.

அன்பை தேடி என்ற திரைப்படத்தில், “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்றும் துவங்கும் பாடலிலும், சூரிய காந்தி என்ற படத்தில், “ஓ… மேரி தில்ரூபா” என்று துவங்கும் பாடலிலும், டி.எம்.எஸ்., உடன் இணைந்து, நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.

தமிழக மக்களை தனது, சிம்மக்குரலால் கவர்ந்த டி.எம்.எஸ்., உடல் நலக் குறைவால், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

டி.எம்.எஸ்., மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. சவுந்திரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின்திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

இவ்வாறு ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இரங்கல் செய்தியில்:

தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., – சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை.

இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவருக்குபுகழை பெற்றுத் தந்தன. அவர் பாடிய, சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம் முதலிய பாடல்கள், மறக்க முடியாதவை.

டி.எம்.சவுந்தரராஜன் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தியில்:

எம்.ஜி.ஆர்., – சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ். ஆர்., ரஜினி, கமல் என, அனைத்து பிரபலங்களுக்கும் பாடி, சரித்திரம் படைத்தவர் டி.எம்.எஸ்., நான் நடித்த பல படங்களில், எனக்காகவும் அவர் பாடியுள்ளார்.

தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்தநடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும்ஆற்றல் பெற்றவர்.

டி.எம்.சவுந்தரராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தே.மு.தி.க., சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக கவர்னர் ரோசையா தனது இரங்கலில்:

டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், நம்மை இறைநிலைக்கு கொண்டு செல்பவை. அவரது மறைவு, தமிழ் திரை துறை மற்றும் தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் ; என் பாடல் நோய்தீர்க்கும் மருந்தாகலாம் தலைப்பில் உள்ள இந்த இரண்டு வரிகளே, டி.எம்.எஸ்., என தமிழ் இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் திறமையை பறைசாற்றும்.

தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்…தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இவரது குரலில் காதல் கசிந்தது; சோகம்இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், இவர் ஒருவர் தான்.