Home கலை உலகம் “தமிழ் உச்சரிப்புக்கு டி.எம்.சௌந்தரராஜனை மிஞ்ச ஆளே இல்லை” – கவிஞர் வாலி

“தமிழ் உச்சரிப்புக்கு டி.எம்.சௌந்தரராஜனை மிஞ்ச ஆளே இல்லை” – கவிஞர் வாலி

788
0
SHARE
Ad

Vaali-featureசென்னை, மே 27 – தமிழ் உச்சரிப்புக்கு பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜனை மிஞ்ச ஆளே இல்லை என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி கூறினார்.

#TamilSchoolmychoice

டி.எம்.சௌந்தரராஜன் மறைவையடுத்து வாலி கூறியதாவது:

“ஸ்ரீரங்கத்தில் நான் வசித்து வந்த காலத்தில் திருச்சி வானொலிக்காக நிறைய பாடல்களை எழுதியிருக்கிறேன். அப்போது திருச்சி வந்த டி.எம்.சௌந்தரராஜன் நான் எழுதிய கவிதைகளைப் பார்த்துவிட்டு, “சென்னைக்கு வந்து சினிமாவில் முயற்சிக்கலாமே?’ என்று சொல்லி என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார்.

நானும் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்கு முயற்சித்தபோது அவரது வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறேன். “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்என்ற பக்திப் பாடல்தான் முதன் முதலாக நான் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல். தமிழ் உச்சரிப்புக்கு இவரை மிஞ்ச ஆளே இல்லை.

நடிகர் சிவகுமார் தனது இரங்கலில்:

சினிமாத்துறைக்கு நான் வருவதற்கு முன்பிருந்தே டி.எம்.சௌந்தரராஜனின் குரலுக்கு நான் ரசிகன். நானும் சினிமாவுக்கு வந்து அவர் பாடிய பாடலுக்கு வாயசைத்து நடிப்பேன் என்று நினைத்ததில்லை.

அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு சிவாஜியுடன் இணைந்து நான் நடித்த “உயர்ந்த மனிதன்படத்தின் மூலம் கிடைத்தது. இந்தப் படத்தில் டி.எம்.எஸ் பாடிய “என் கேள்விக்கென்ன பதில்என்று தொடங்கும் பாடலுக்கு நான் வாயசைத்து நடித்திருப்பேன். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானை இந்தக் காலத்தில் பார்ப்பதே அரிது.

 திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்:

டி.எம்.சௌந்தரராஜனின் குரல் மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அதனால்தான் நான் இயக்கிய “பலப்பரீட்சைஎன்ற படத்துக்கு அவரை இசையமைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் எனக்காக இசையமைத்தார்.

அவர் இசையமைத்த ஒரே படம் இதுதான். பிறகு வேறு படங்கள் எதற்கும் அவர் இசையமைக்கவில்லை. இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, “தொடர்ந்து பாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் இசையமைப்பில் கவனம் செலுத்த முடியவில்லைஎன்றார். ஆயினும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.