Home கலை உலகம் டி.எம்.எஸ் வாழ்க்கை வரலாறு – மதுரையில் தொடங்கி உலகையே வலம் வந்த பாடகர்!

டி.எம்.எஸ் வாழ்க்கை வரலாறு – மதுரையில் தொடங்கி உலகையே வலம் வந்த பாடகர்!

4007
0
SHARE
Ad

TMS-Slider-black-and-whiteமே 27 – மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது நவரசம் ததும்பும் பாடல்களால் உலகையே வலம் வந்தவர் டி.எம்.எஸ். என அழைக்கப்பட்டும் டி.எம்.சவுந்தர்ராஜன்.

#TamilSchoolmychoice

டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில்இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சிசீனிவாச அய்யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம், முறையாகஇசை பயின்றார். இசைப் பயிற்சிக்கு பின், பல்வேறு கச்சேரிகளில் பாடினார்.

கடந்த, 1946 ஆண்டு வெளிவந்த, “கிருஷ்ண விஜயம் என்ற படத்தில், “ராதே என்னை விட்டுஓடாதே… என்பதே, திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல்.

தமிழ், தெலுங்குஆகிய மொழிகளில், 10 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.

கதாநாயகர்களுக்குதகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார்என, போற்றப்பட்டார். “இசை சக்கரவர்த்தி “ஏழிசை மன்னர் “ஞானகலா பாரதி போன்றவிருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையைபாராட்டி, மத்திய அரசு, “பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

கடந்த, 10 நாட்களுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த டி.எம்.எஸ்., கடந்த, 19ம் தேதி, வீட்டிற்குதிரும்பினார்.

பின், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று(மே 25ம் தேதி) உடல்நிலை மோசமானதால், காலமானார். இவருக்கு, சுமித்ரா என்றமனைவியும், மல்லிகா என்ற மகளும், பால்ராஜ், செல்வகுமார் ஆகிய மகன்களும்உள்ளனர்.

வாழ்க்கை வரலாறு

டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில்சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார்.

1946ம் ஆண்டுமுதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின்காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

சிறு வயதில் காரைக்குடி ராஜாமணிஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில்பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது.

சுந்தரராவ் நட்கர்னியின் “கிருஷ்ண விஜயம் படத்தில் “ராதே நீ என்னை விட்டுப்போகதேடி என்ற பாடலை பாடினார். “தேவகி என்ற படத்தில் பாடி, நடிக்கவும்செய்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப்புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும்குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும்பாடினார்.

இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “தமிழ் செம்மொழிமாநாட்டு பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும்அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப்பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு “பத்மஸ்ரீவிருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் “கலைமாமணி உட்பட பல விருதுகளைபெற்றார்.

பெற்ற பட்டங்கள்

இவரது திறமையை பாராட்டி, பல்வேறுஅமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக்குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர்போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.

மதுரையும் – டி.எம்.எஸ்ஸூம்

மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும்பிரிக்க முடியாது.

பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம்அமைக்கப்பட்டது மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்!

மதுரைதெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் –வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயேபக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டுஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம்போட்டார்.

சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்தடி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான “கிருஷ்ண விஜயம் என்றசினிமாவில், “”ராதை என்னை விட்டு ஓடாதடி, என்ற பாடலை பாடி ரசிகர்களின்உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது.

அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்குஅதிபதியாக்கியது.

சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடிமதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில்முதல்முறையாக 1980ல் “அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம்ஏற்படுத்தப்பட்டது.

பின், இதே பகுதியில் 1986ல் “மதுரை நரசிம்மபுரம்பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம் உதயமானது.

சவுராஷ்டிரா பள்ளியில் நடைப் பயிற்சி

உடன்பிறப்புகள் தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார்.இவரது இளைய சகோதரர்கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார்.

மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன்தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள்மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல்மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி

டி.எம்.சவுந்திரராஜன்சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார்என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன்இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ்தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல்போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர்வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமிதிருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்ததுகுறிப்பிடத்தக்கது.

டி.எம்.எஸ் – சங்கீத மும்மூர்த்திகள் – பொருத்தம்

சங்கீத மும்மூர்த்திகள் என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கிலமுதல்எழுத்து “டி “எம் “எஸ் என வரும். “”சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களைஎனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம், என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல்

வாலிபர்கள்சுற்றிய உலகம் என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில்டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின்சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை.

எனினும், சவுராஷ்டிரா மொழியில் “கெட்டிவிடோ (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர்எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிராமொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப் பாடல் என்பதுகுறிப்பிடத்தக்கது.