Home உலகம் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் லண்டன் வீடு விற்பனைக்கு வருகிறது

தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் லண்டன் வீடு விற்பனைக்கு வருகிறது

717
0
SHARE
Ad

lashmi-mittalமே 27- பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டல், மத்திய லண்டன் பகுதியில் உள்ள தனது ஆடம்பர பங்களாவை விற்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கென்சிங்டனில் உள்ள பேலஸ் கிரீன் பங்களாவை அவர் கடந்த 2008-ம் ஆண்டு 11.7 கோடி பவுண்டுக்கு வாங்கினார். 12 படுக்கையறை கொண்டது இந்த பங்களா.

அவர் தனது மகன் ஆதித்யா மிட்டலுக்காக வாங்கியிருந்தாலும், வாங்கிய நாளில் இருந்தே ஆதித்யா மிட்டல் இதில் குடியேறவில்லை. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பங்களாவை விற்றுவிட லட்சுமி மிட்டல் முடிவு செய்துள்ளாராம்.