Home கலை உலகம் ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த்

‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த்

659
0
SHARE
Ad

samanthaசென்னை, மே 15- சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் அருகருகே அமர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். அங்கு ஒன்றாக உட்கார்ந்து ராகுகேது பூஜை செய்தார்கள். இதில் இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர். இதன்மூலம் அவர்கள் காதல் சமாச்சாரம் உறுதிபடுத்தப்பட்டது. திருப்பதி கோவிலுக்கும் சேர்ந்து போய் சாமி கும்பிட்டார்கள். இருவரும் காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சமந்தாவும், சித்தார்த்தும் பங்கேற்றார்கள். சித்தார்த்தை மேடைக்கு அழைத்து விழாக்குழுவினர் பாடச் சொன்னார்கள். அப்போது மைக்கை பிடித்து ”என்னவளே அடி என்னவளே இதயத்தை தொலைத்து விட்டேன், எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன், உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடிவந்தேன்” என்று காதலன் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.

#TamilSchoolmychoice

அப்போது கூட்டத்தினர் மேடை முன்னால் அமர்ந்த சமந்தாவின் முகத்தை பார்த்தனர். அவர் வெட்கத்தால் தலை குனிந்தார். கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பினர்.