Home கலை உலகம் ‘மரியான்’ படத்தில் சிறுத்தையுடன் நடிக்க பயந்தேன்- நடிகர் தனுஷ் பேட்டி

‘மரியான்’ படத்தில் சிறுத்தையுடன் நடிக்க பயந்தேன்- நடிகர் தனுஷ் பேட்டி

769
0
SHARE
Ad

tanushசென்னை, மே 15- தனுஷ்-பார்வதி ஜோடியாக நடிக்கும் படம் ‘மரியான்’.

பரத்பாலா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது இதில் நடித்த அனுபவம் பற்றி தனுஷ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

‘மரியான்’ படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். நபீபியா நாட்டில் உச்சக்கட்ட காட்சிகளை எடுத்தோம். அங்கு பயங்கர வெயில். பாலைவனத்தில் செருப்பு அணியாமல் நடிக்க வைத்தனர். மணலில் வெறும் காலுடன் நிற்க முடியல. மண், தூசி என்று ரொம்ப சிரமப்பட்டேன்.

இந்த படத்தில் நடித்து இருக்க கூடாது என்றுகூட நினைத்தேன். சிறுத்தையுடனும் நடிக்க வைத்தார்கள். அதை பார்த்து பயந்தேன். ஒருநாள் முழுவதும் சிறுத்தையுடன் இருக்க வைத்தார்கள். இவ்வளவு மெனக்கெட்டு நடித்ததற்கு பலன் கிடைத்துள்ளது. படத்தை பார்த்து சந்தோஷப்பட்டேன்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறி இருக்கிறது. படத்துக்கு இசை முக்கியமானதாக இருக்கும். இதில் நானும் ஒரு பாடல் எழுதி உள்ளேன். கதைதான் இந்த படத்தில் என்னை நடிக்க தூண்டியது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை பார்வதி கூறும் போது நான் நடித்த ‘பூ’ படத்தை பார்த்து தான் இயக்குனர் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மரியான் கதாபாத்திரத்தின் வாழ்க்கைதான் இந்த படம்.

இதில் எனது கதாபாத்திரம் பிரமாதமாக அமைந்துள்ளது. படத்தில் வேறு பெண் மாதிரி தெரிந்தேன். அவ்வளவு அழகாக என்னை காட்டி உள்ளனர் என்றார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, இயக்குனர் பரத்பாலா டாகுமென்டரி மற்றும் விளம்பர படங்கள் எடுத்து இப்போது சினிமா படம் எடுக்க வந்துள்ளார். நாங்கள் நண்பர்கள். கதை கேட்காமலேயே இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.