Home நாடு நஜிப் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

நஜிப் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

462
0
SHARE
Ad

Najibபுத்ரா ஜெயா, மே 17 – பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று புத்ரா பெர்டானாவில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தின் போது பிரதமர் நஜிப்,  மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவது குறித்து தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறினார்.

நேற்று காலை அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பேரரசர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு பிற்பகல் 3.20 மணிக்குத் தொடங்கிய அக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் முடிவடைந்தது.