Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் சேவியர் ஜெயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு?

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் சேவியர் ஜெயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு?

518
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமே 17 – மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் இரண்டாவது தவணைக்கு அமையவிருக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்க ஆட்சிக்குழுவில் இடம் பெறுவதற்கு இரண்டு பெயர்களை ஜசெக சமர்ப்பித்துள்ளது.

அவர்களில் ஜசெக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக வென்ற கணபதி ராவ் பெயர் இடம் பெறவில்லை என்பதால், சிலாங்கூர் அரசின் இந்தியப் பிரதிநிதியாக பிகேஆர் கட்சி சார்பில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீண்டும் இடம் பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

பிகேஆர் சார்பாக நிறுத்தப்பட்ட மற்றொரு இந்திய சட்டமன்ற உறுப்பினரான மாணிக்கவாசகம், புக்கிட் மெலாவாத்தி தொகுதியில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார்.

#TamilSchoolmychoice

எனவே, பிகேஆர் சார்பாக வேறு இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால், மீண்டும் சேவியர் ஜெயகுமார்தான் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார்.

சேவியர் ஜெயகுமாருக்கு பதிலாக கணபதி ராவ் ஆட்சிக் குழுவில் இடம் பெற வேண்டும் என ஒரு சில தரப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில்தான், ஜசெக தனது தரப்பில் சமர்ப்பித்த ஆட்சிக் குழு உறுப்பினர் பட்டியலில் கணபதி ராவ் பெயர் இடம் பெறாமல் சாங் தெங் கிம், யான் யோங் ஹியான் வா ஆகிய இரு பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.