Home கலை உலகம் 20 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஸ்ரீப்ரியா

20 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஸ்ரீப்ரியா

662
0
SHARE
Ad

sri-priyaமே 21- இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த, விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணிக் கதாநாயகிகள் பட்டியலில் இருந்தவர் ஸ்ரீப்ரியா.

நடிப்பதோடு மட்டுமல்லாமல், “சாந்தி முகூர்த்தம்”, “நானே வருவேன்” போன்ற படங்களையும் இயக்கினார்.

தற்போது இருபது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

நேரடி தமிழ் படமாக இல்லாமல் பகத் பாசில், ரீமா கல்லிங்கல் நடித்த படமான 22 பீமேல் கோட்டயம் என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட படத்தைத் தான் தமிழில் மறுப்பதிவு செய்கிறார் ஸ்ரீப்ரியா.

தமிழில் நித்யா மேனன் நடிக்கிறார். மலையாளப் படத்தில் உள்ள கதையை அப்படியே எடுக்காமல் தமிழ் ரசிகர்களின் ரசணைக்கேற்றபடி சில மாற்றங்களை செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்குவது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் முன்னா‌ள் நாயகி.