Home இந்தியா இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்- தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்- தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

627
0
SHARE
Ad

rajiv-gandhiபுது டில்லி, மே 21- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி தலைமை செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை செய்தனர்.

#TamilSchoolmychoice

தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் திகதி தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் திகதி இந்தியா முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.