Home வணிகம்/தொழில் நுட்பம் 750 மில்லியன் பயனர்களை எட்டியது ‘கூகுள் குரோம்’

750 மில்லியன் பயனர்களை எட்டியது ‘கூகுள் குரோம்’

633
0
SHARE
Ad

google-chromeகோலாலம்பூர், மே 21- இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும்.

இவ்வுலாவியானது தற்போது உலகெங்கிலும் 750 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இதில் கடந்த வருடத்தில் மட்டும் 300 மில்லியன் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளதுடன்  கணினி, மடிக்கணனி, மற்றும் கையடக்க கணினி  போன்றவற்றில் குரோம் உலாவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 750 மில்லியனை எட்டிவிட்டதாக அந்திநிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இவ்விரைவான வளர்ச்சிக்கு குரோம் உலாவியின் எளிமையான வடிவமைப்பும், விரைவான செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.