இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது இருக்கும் குரோமின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி, ஈடு இணையில்லாத சேவையை வழங்கி பயனர்களின் இணையச் செயல்பாட்டில் நிரந்தர விருப்பமாக இருக்க முடிவு செய்துள்ளது. ‘ப்ரோட்லி’ (Brotli) என பெயரிடப்பட்டுள்ள அந்த மேம்பாடு, வழக்கமான கூகுள் குரோமைக் காட்டிலும், 26 சதவீதம் அதிவேகமாக இருக்கும் என்று கூகுள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திறன்பேசிகளில் இந்த உலாவியை பயன்படுத்தினால், தரவுகளின் நுகர்வும் (Data Consumption) குறையும் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இதற்கான அறிவிப்புகளும், நடைமுறை சாத்தியங்களும் எப்போது என்பது கூகுளுக்கு மட்டுமே வெளிச்சம்.