Home Featured உலகம் சிங்கப்பூர் சூதாட்ட விடுதியில் $911,500 திருட்டு!

சிங்கப்பூர் சூதாட்ட விடுதியில் $911,500 திருட்டு!

892
0
SHARE
Ad

Casino chipsசிங்கப்பூர் – சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சூதாட்ட விடுதியில், 900,000 டாலர்கள் மதிப்புடைய கேசினோ வில்லைகளை (casino chips) திருடிய நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஜாக்சன் இயோ (வயது 24) என்ற அந்நபர் மலேசியாவில் மறைந்திருந்த போது, மலேசியக் காவல்துறையின் உதவியுடன் அவரை நேற்று முன்தினம் கைது செய்திருக்கிறது சிங்கப்பூர் காவல்துறை.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி, கேசினோ வில்லைகள் கொண்ட அந்தப் பை திருடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

1000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புடைய அந்தப் பையில், ஓட்டுநர் உரிமம், பிஎம்டபிள்யூ கார் சாவி, கடன் அட்டைகள், 10,000 சிங்கப்பூர் டாலர்கள் (30,400 ரிங்கிட்) ரொக்கப் பணம், 900,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புடைய கேசினோ வில்லைகள் மற்றும் 500 டாலர் மதிப்புடைய சாம்சுங் கைப்பேசி ஆகியவை இருந்துள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 911,500 சிங்கப்பூர் டாலர்கள் (2.77 மில்லியன் ரிங்கிட்) என்று கூறப்படுகின்றது.