Home Featured நாடு 2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

1364
0
SHARE
Ad

kuala_lumpurநியூ யார்க் – 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ் நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட் அமைப்பும், சமீபத்தில் ஏறக்குறைய 60 நாடுகளைச் சேர்ந்த 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரம் உட்பட 24 தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

india-066இந்த ஆய்வின் முடிவில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை கனடாவும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தும் பிடித்துள்ளன. 4-வது இடம் அமெரிக்காவுக்கும், 5-ம் இடம் சுவிடனுக்கும், 6-வது இடம் ஆஸ்திரேலியாவுக்கும், 7-வது இடம் ஜப்பானுக்கும், 8, 9 மற்றும் 10-வது இடங்கள் முறையே பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்கிற்கும் கிடைத்துள்ளன.

#TamilSchoolmychoice

singaporeஇந்தப் பட்டியலில் சிங்கபூருக்கு 15-வது இடமும், மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது.