Home Featured கலையுலகம் நடிகர் ராம்கி மீது கல்லூரி மாணவி பரபரப்புப் புகார்!

நடிகர் ராம்கி மீது கல்லூரி மாணவி பரபரப்புப் புகார்!

630
0
SHARE
Ad

ramkiஈரோடு – நடிகர் ராம்கியால் தனக்கும், தனது காதல் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி, ஈரோடு காவல்துறை காணிப்பாளரிடம் கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம், பழனிபேட்டையைச் சேர்ந்தவர் ஸ்மிர்த்தி (19). இவர் நேற்று ஈரோடு காவல்துறை காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது கணவர் வெங்கடேசுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் மனுவில், “நான், பொறியியல் இளங்கலை படித்து வருகிறேன். கடந்த, 11 மாத காலமாக, உடற்பயிற்சி மையத்தின் பயிற்சியாளரும், உணவு விடுதி ஊழியருமான வெங்கடேஷை காதலித்தேன். இது, பெற்றோருக்குத் தெரிந்ததால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.”

“கடந்த, 18-ம் தேதி, வீட்டில் இருந்து வெளியேறிய நான், ஈரோடு பெரியார் மன்றத்தில் வெங்கடேசுடன் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். அதை சார்-பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவும் செய்து உள்ளோம். நான் திருமணம் செய்து கொண்டது, என் குடும்பத்தாருக்கும், என் தாய் மாமாவும், நடிகருமான ராம்கிக்கும் பிடிக்கவில்லை. இதனால் எனக்கும், என் கணவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து காவல்துறை ராம்கி மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் ராம்கியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.