Home Featured நாடு பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு – காவல்துறையுடன் இணைந்து இராணுவமும் கண்காணிப்பு!

பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு – காவல்துறையுடன் இணைந்து இராணுவமும் கண்காணிப்பு!

743
0
SHARE
Ad

batuகோலாலம்பூர் – பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில், எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பத்துமலையில் முதல் முறையாக மலேசிய இராணுவமும், காவல்துறையும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த வாரம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. அதற்கு ஏற்றார் போல், கோலாலம்பூரில் ஐஎஸ் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டதோடு, நகரின் முக்கியப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்த அந்நபர் திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.