Home உலகம் 47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி

47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி

480
0
SHARE
Ad

obamaமே 22- மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார்.

பர்மாவில் கடந்த 1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை அடுத்து, சர்வாதிகார நாடாக மாறியது. இதனையடுத்து மியான்மர் என்று பெயர் மாற்றப்பட்டும், அந்நாட்டின் இராணுவ அரசை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை.

பிற நாடுகள் அனைத்தும் மியான்மர் என்று அழைக்கும் நிலையில், பர்மா என்றே அமெரிக்கா அழைத்து வருகிறது. இந்நிலையில் மியான்மரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இராணுவ அரசு பதவி விலகியது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து ஜனாதிபதி தீன் செயின் தலைமையில் ஜனநாயக அரசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மர் தலைவர் வெள்ளை மாளிகை சென்றுள்ளார்.

அவரை ஜனாதிபதி ஒபாமா அன்புடன் வரவேற்று, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார். அதில், மியான்மரில் சமீபத்தில் நடந்த புத்த மதத்தினர்- முஸ்லிம்கள் கலவரம் குறித்தும் ஒபாமா கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், அந்நாட்டில் ஏற்பட்டு வரும் ஜனநாயக மாற்றங்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ சீ விடுதலை போன்றவற்றிற்கு ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.