Home இந்தியா தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்றப் பட்டுவிட்டது – காங்கிரஸ்

தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்றப் பட்டுவிட்டது – காங்கிரஸ்

578
0
SHARE
Ad

congresபுதுடெல்லி, மே 22- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்ற பட்டுவிட்டதாக 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 4 ஆண்டுகள் பூர்த்தி செய்து இன்று 5வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்றப்பட்டு விட்டதாக  காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இதே போன்று மத்திய அரசு அணைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டதாக திமுக தெரிவித்துள்ளது.

சில்லறை வியாபாரிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக திமுக கூறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல்வேறு  சாதனைகள் அடங்கிய தொகுப்பை மன்மோகன் சிங் இன்று வெளியிடுகிறார்.

அதன் பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்தளிக்கிறார்.