Home கலை உலகம் கிரிக்கெட் சூதாட்டம் ; போலீசில் சிக்கும் தமிழ் நடிகைகள் – பரபரப்பு தகவல்

கிரிக்கெட் சூதாட்டம் ; போலீசில் சிக்கும் தமிழ் நடிகைகள் – பரபரப்பு தகவல்

674
0
SHARE
Ad

iplசென்னை, மே. 23- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

#TamilSchoolmychoice

இது சம்பந்தமான விசாரணையை தற்போது போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள் பற்றி கணக்கெடுக்கப்படுவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் நடிகைகள் பலர் இதில் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகைகளும் இதில் மாட்டுகிறார்கள்.

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்த சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்படும் என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தரகர்களின் மொபைல் போன்களில் நடிகைகள்  தொலைபேசி எண்கள் உள்ளனவா என்றும் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். கவர்ச்சி நடிகைகளாக வலம் வரும் இரண்டு நடிகைகள் மீது மட்டும் போலீசாரின் சந்தேகப் பார்வை இறுகியுள்ளது. மேலும் சில இளம் நடிகைகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.