இஸ்லாமாபாத், மே 23- சீன பிரதமர் லீ கெகியாங் பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்து வருகிறார். ராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் அதிபர் சர்தாரிவுடன் பங்கேற்றார்.
அப்போது சீன பிரதமர் பேசியதாவது:-
பாகிஸ்தான்-சீனா உறவு வலுவாக உள்ளது. இதை யாராலும் உடைக்க முடியாது. உலகில் என்ன மாற்றம் நடந்தாலும் எங்களது உறவு தொடர்ந்து நீடிக்கும். பாகிஸ்தான் வலிமைக்கு நாங்கள் அனைத்து வகையிலும் உதவுவோம்.
இந்த உதவியை ஒருபோதும் நாங்கள் நிறுத்த மாட்டோம். நான் பாகிஸ்தானுக்கு வந்த நோக்கமே பாகிஸ்தானுடன் நாங்கள் எப்போதும் நட்புடன் இருப்போம் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவோம் என்பதை உலகுக்கு தெரிவிப்பதற்காக தான்.
எங்களது உறவு அடிமட்டத்திலிருந்து உருவாகியுள்ளது. பாகிஸ்தானை சிறந்த நாடாக உருவாக்க உதவுவதை நாங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அதிபர் சர்தாரி பேசும்போது சீனாவின் உதவியால் பாகிஸ்தான் வலுவான நிலையை எட்டி இருக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா பெரும்பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.