Home உலகம் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஜுன் 5-ந்தேதி தேர்வு

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஜுன் 5-ந்தேதி தேர்வு

633
0
SHARE
Ad

nawasஇஸ்லாமாபாத், மே 27- பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 126 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

அக்கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பாராளுமன்ற கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப்பை இன்று தேர்வு செய்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் வரும் (ஜுன்) மாதம் 1-ந்தேதி கூடுகிறது. புதிய எம்.பி.க்களுக்கு அன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.

சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 எம்.பி.க்கள் சமீபத்தில் நவாஸ் ஷெரீப் கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து, அவரது கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.

இதன் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு மேலும் 37 தேர்ந்தெடுக்கப்படாத எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். இதனால், நவாஸ் ஷெரீப் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 181 ஆக உயரும்.

342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 172 எம்.பி.க்களின் ஆதரவே போதுமானது என்ற நிலையில் நவாஸ் ஷெரீப்பை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் பாராளுமன்ற புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு ஜுன் 2ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 3ம் தேதி இதற்கான வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

இதனையடுத்து, பிரதமர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் 4ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் தேர்தல் 5ம் தேதி நடைபெறும்.

தற்போதைய நிலவரப்படி 181 எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக 5ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார்.

அடுத்த ஓரிரு நாட்களில் அவர் பதவி ஏற்றுக் கொள்வார் என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக 3வது முறை நவாஸ் ஷெரீப் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.