Home அரசியல் “அரசியல் போட்டியில் என்னை இழுக்காதீர்கள்” – சாமிவேலு எச்சரிக்கை

“அரசியல் போட்டியில் என்னை இழுக்காதீர்கள்” – சாமிவேலு எச்சரிக்கை

560
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர், மே 28 – நடைபெறவிருக்கும் மஇகா கட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் தங்களது அரசியல் போட்டியில் தன்னை இழுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ. எஸ். சாமிவேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த சாமிவேலு, “கட்சியை வழிநடத்த திறமையான தலைவர் யார் என்று கருதுகிறேனோ அப்போது அவருக்காக நான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்” என்றும் சாமிவேலு பெர்னாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.