Home இந்தியா அ.தி.மு.க. செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது- ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது- ஜெயலலிதா அறிவிப்பு

603
0
SHARE
Ad

jeyaசென்னை, மே. 28- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் வருகிற 8-ந்தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும். செயற்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

இதில் பங்கேற்கும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். எனவே செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.